Tuesday, December 6, 2011

இந்நாள் இனியநாள்

தரும காரியங்கள் தொடங்க யாதொரு நாளும் சிறந்த நாளேயாகிலும் புதனை மட்டும் நாம் புகழ்வதுயேன்?

மங்களங்கள் சேரும்
திங்களது கூட

மதிவாய் நிறையும்
செவ்வாய் பிறக்க

பசும்பொன் கிடைத்திடும்
புதன்தான் கிடைக்காது

தீயதியாது ஆனாலும்
தூயவியாழன் நீக்கிடும்

நள்ளிருள் அகலவே
வெள்ளிதான் பிறந்திடும்

இனியவை ஆயிரம்
சனியது தந்திடும்

ஞாலமுழுதிற்காய்
ஞாயிறொன்றுண்டு

Friday, November 25, 2011

இராம!

சொல்லா வகையாய் கொடிதாய் வினைகள்
பல்லா யிரமும் துணிந்தே புரிந்தேன்
வில்லா லிலங்கை அழித்தான் அடிகள்
எல்லா மெனஇருப்பன் இனி

புகநின்ற தனிநா யகனைத் தடுத்தமையும்
அகம்கொண்ட செருக்கதனை நீக்கென் மடநெஞ்சே!
நகம்கொண்டு இரணியனின் மார்வகம் கீண்டான்
நிகமம் புகழடியைப் பாடு!

Friday, November 18, 2011

எல்லாக் குறளும் குறளல்ல. திருக்குறள் அல்ல

அறத்தோடு பொருள்கூறும் இன்பமாய் குறளன்றித்
திகழ்தரு நீதிநூல் யாது

Friday, October 28, 2011

தமிழ் எனக்கு

தமிழென் மூச்சல்ல, தேனூறும் செவிக்கினிய
தமிழென் பேச்சல்ல; தொன்மொழியே ஆனாலும்
திருவருளால் நான்சுவைக்க அமுதென்பேன் பாட்டிசைப்பேன்
கருநிறவேள் மாணடி மேல்

Saturday, October 8, 2011

பண்டிகைத் திருநாள்

சீர்க்கங்கை நீராடி பூம்பட்டுத் தானுடுத்தி
ஏழ்பிறப்பும் உடனிருக்க மாயவனை நாம்பாடி
பால்திரளை நெய்தோயும் கன்னல்நொய் இவையுடனே
தேந்தமிழ்சொல் சுவைக்குனன் நாள்