Sunday, December 30, 2012

அன்னை

கருணையே உருவானவளாய்  
எனை காக்கும் அன்னை 
சந்திர பிம்பமதை போல் 
முகங்கொண்ட அன்னை 

மாலவன் மார்பினில் நிலையான எங்கள் 
திருவான அன்னை 
மங்களங்களுக்கேல்லாம் மங்களமான  எங்கள் 
பொன்னிறங்கொண்ட அன்னை 

வேண்டுவோர் வேண்டிட நிலையான செல்வமாய் 
திருமாலைத் தந்திடும் நிகரற்ற அன்னை 
கற்பக விருட்சமாய் ஏனைய செல்வமும் 
கேட்பவர்கருளிடும் உலகாளும் அன்னை 

Tuesday, December 11, 2012

ஸ்ரீராமகீதம்

ராகம்: நாட்டை 
பல்லவி
அயோத்யா பாலன  ஸ்ரீராம!
ஜனகாத்மஜா சமேத!

அனுபல்லவி
கரதூஷணாதி சம்ஹார!
ஹனுமதா வந்தித மஹாவீர!

சரணம் 
மாயா ம்ருக வேஷ மாரீச அனுகத சுராகவ!
மனுவம்சஜ! திவாகர!

அயோத்யா பாலன ...

ராக்ஷஸ்யாஸ்ச சாதூனாம் ஏக-ப்ரிய-தர்சன!
தாப த்ரய நாசன!