Tuesday, May 29, 2012

குறளந்தாதி

நீர்த்தொட்டு மாநிடர்தன் மனம்சேர யாவையும்
கார்ப்பட்டு இன்னாசெய் கலி

In the troublesome age of Kali, everything is corrupt, from water to the minds of the people.

கலிகாலத் தானானான் தூய்வழிதன் நெறிநின்றான்
ஒப்பிலாத் துன்பமுடன் பட்டு

A man of the age of Kali who took the path of righteousness undergoes unparalleled hardships.

பட்டாலும் போதாதோ மெய்மனத்து நெறிமீறிக்
கெட்டால்தான் தீரும் போல்

As if the hardships are not enough, Kali makes sure he is spoiled.

போகத்து வழிவிட்டு  மூவுலகை மாவலிதன்
யாகத்துப் பெற்றவனைச்  சேர்

Stop aspiring for the desires of the senses and surrender by your mind to the Lord who had as a gift the three worlds in the Yaaga of Mahabali.

சேரும்கால் சேராது யாவகை  தீயவைகள்
நேரும்தான் உய்தக்க மாடு

When surrendered no evil can touch. And would earn the wealth that is needed for a spiritual life.

1 comment: