சரயு நதியின் குறையில் அருளால்
அளவில் செல்வம் பெறினும் துளியும்
கருவம் தங்கா மனமுடை மக்கள்
உறையும் நிகரில் நகராம் அயோத்தி
மறைகள் கூறும் பொருள்கள் நான்கை
இரண்டின் ஆறு திங்கள் தோறும்
இரவும் பகலும் காக்கும் மக்கள்
நிறையும் நகராய் ஒளிரும் அயோத்தி
கதிரவன் தன்சேய் முதலவன் தொட்டு
ரகுபுகழ் மன்னவர் காத்திடும் கோசலை
அமரர்கள் தங்களின் நாடுடன் சேரும்
கருநிற நாயகன் வந்துகந்த அயோத்தி
No comments:
Post a Comment